பிரதமர் மோடி கோவை வருகை - தேர்தல் பரப்புரை கூட்டங்களில் பங்கேற்கிறார்

தாராபுரத்தில் ஒரே மேடையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் பரப்புரை செய்கிறார்.;

Update: 2021-03-30 06:00 GMT

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து கேரள மாநிலம் பாலக்காடு மற்றும் தாராபுரம் பகுதிகளில் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்தார். பின்னர் கோவை விமான நிலையத்தில் இருந்து மோடி, பாலக்காட்டிற்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றார். பாலக்காடு பொதுக்கூட்டம் முடிந்த பின்னர், ஹெலிகாப்டரில் தாராபுரம் செல்ல உள்ளார். அங்கு நரேந்திர மோடி ஒரே மேடையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்கிறார்.

Tags:    

Similar News