கொரோனா சிகிச்சை மையத்தில் அமைச்சர் சக்கரபாணி ஆய்வு
கோவை, சரவணம்பட்டி குமரகுரு கல்லூரியில் 360 படுக்கைகளும், அரசு பொறியியல் கல்லூரியில் 350 படுக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவலை தடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின் பேரில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கோவையில் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கோவையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் இராமச்சந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக உணவு மற்றும் உணவு பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் வனத்துறை அமைச்சர் இராமச்சந்திரன் ஆகியோர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே, மாவட்டம் முழுவதும் 10 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இந்நிலையில் சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் அமைச்சர் சக்கரபாணி ஆய்வு மேற்கொண்டார். குமரகுரு கல்லூரியில் 360 படுக்கைகளும், அரசு பொறியியல் கல்லூரியில் 350 படுக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா சிறப்பு வார்டுகளை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சக்கரபாணி, அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.