சட்டவிரோதமாக செங்கல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்
தடாகம் சுற்றுவட்டார பகுதிகளில் செங்கல்சூளைகள் செயல்பட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.;
கோவை மாவட்டம் தடாகம் சுற்றுவட்டார பகுதிகளில் செங்கல்சூளைகள் செயல்பட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள செங்கல் சூளைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் கணுவாய் பகுதியில் நேற்றிரவு தடாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜான் தலைமையிலான தடாகம் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையின்போது சட்ட விரோதமாக செங்கற்களை ஏற்றி வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து லாரியை பறிமுதல் செய்த தடாகம் காவல்துறையினர், லாரியை ஓட்டி வந்த ஓட்டுனரை கைது செய்தனர்.