கோவை ஜி.என்.மில்ஸ் சாலையில் அடிபட்ட குதிரை: கண்டு கொள்ளாத மாநகராட்சி

கோவை ஜி.என்.மில்ஸ் அருகே சாலை விபத்தில் காயமடைந்த குதிரையை காப்பாற்ற கோரியும் மாநகராட்சி ஊழியர்கள் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் கவலை.

Update: 2022-07-04 08:00 GMT

அடிபட்ட குதிரைக்கு சிகிச்சை அளிக்கப்படும் காட்சி.

கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் சாலையில் சுற்றித் திரிந்த ஆண் குதிரை ஒன்று அடையாளம் தெரியான வாகனம் மோதியதில் படுகாயமடைந்து சாலை ஓரத்தில் வலியால் துடித்தபடி இருந்தது. இதனை அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் பார்த்து கோவை மாநகராட்சி, விலங்குகள் பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் அரசு கால்நடை மருத்துவமனை மருத்துவர் உள்ளிட்டவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆனால் நீண்ட நேரம் ஆகியும் யாருமே வராததால் அங்கிருந்த பொதுமக்கள் தனியார் கால்நடை மருத்துவர் ஒருவரை அழைத்து வந்து குதிரைக்கு சிகிச்சை அளித்தனர். ஊசி மற்றும் குளுக்கோஸ் அளித்து காயத்திற்கு மருந்து போட்டு விட்டனர். பலர் முயற்சி செய்தும் மாநகராட்சி நிர்வாகத்தினர், விலங்குகள் பாதுகாப்பு சங்கத்தினர், அரசு கால்நட்டை மருத்துவமனை மருத்துவர்கள் கண்டுகொள்ளாதை பார்த்து அங்கிருந்த பொதுமக்கள் மிகுந்த வேதனையடைந்தனர்.

அதேபோல் இந்தப் பகுதியில் பல குதிரைகள் சாலையில் குறுக்கே சுற்றித் திரிகின்றன. இதனால் விபத்துகள் ஏற்படும் ஆபத்து உள்ளதால் குதிரைகளை சாலைகளில் திரிய விடும் அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News