காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு
எதிர்பாராத விதமாக அங்கு வந்த காட்டு யானை காரையை தாக்கியுள்ளது.
கோவை மாவட்டம் ஆனைக்கட்டி தூவைபதி அருகே உள்ள ஆர்நாட்காடு கிராமத்தை சேர்ந்தவர் காரை. 70 வயதான இவர், இன்று காலை காப்புக்காட்டிற்கு சுமார் 500மீ வெளியே மரங்கள் மற்றும் அடர்ந்த புதர்கள் நிறைந்த நிலத்தில் இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு வந்த காட்டு யானை காரையை தாக்கியுள்ளது. இதில் காரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். இதையடுத்து உடலைக் கைப்பற்றிய வனத்துறையினர் உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தடாகம் காவல் நிலையினர் மற்றும் கோவை வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.