காவல்துறை அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த அதிமுக எம்எல்ஏ மீது வழக்குபதிவு செய்ய மனு

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார் காவல்துறை அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருந்தார்.

Update: 2021-12-10 08:30 GMT

திமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

கடந்த 7 ம் தேதியன்று கோவை மாவட்ட அ.இ.அ.தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில், கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார் காவல்துறை அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருந்தார். நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம், திமுகவிற்கு சாதகமாக செயல்படும் அதிகாரிகளை ஓய்வு பெற்றாலும் விடமாட்டோம் எனவும் காவல் துறை அதிகாரிகளை கடுமையாக விமர்சித்து பேசியது சர்ச்சையானது.

சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் விதத்தில் பேசிய பி.ஆர்.ஜி. அருண்குமார் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி, கோவை மாநகர் மேற்கு மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் சரவணம்பட்டி காவல் நிலைய ஆய்வாளரிடம் புகார் மனு அளித்தனர். சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் காவல் துறை அதிகாரிகளுக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார் மிரட்டல் விடுத்து இருப்பதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுகவினர் தெரிவித்தனர். இந்த புகாரை பெற்ற காவல்துறை ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

Tags:    

Similar News