ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரணும்: கோவை கலெக்டர் சமீரன் வேண்டுகோள்

கோவை மாவட்டத்தில் நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று, கலெக்டர் சமீரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.;

Update: 2021-06-21 12:35 GMT

கோவை கொடிசியா வளாகத்தில் இன்று நடைபெற்ற யோகாசான நிகழ்ச்சி.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, கோவை கொடிசியா வளாகத்தில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு, யோகாசனம்  குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக,  சுகாதாரத்துறை சிறப்பு யோகா வகுப்பு நடத்தப்பட்டது. இதனை, கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கலெக்டர், கொரோனா ஊரடங்கு தளர்வு குறித்த தமிழக அரசின் அறிக்கையில் மாவட்டங்கள் 3 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் பிரிவில் கோவை மாவட்டம் உள்ளது. முதல் பிரிவில் உள்ள கொரோனா தொற்று அதிகம் பாதித்த 11 மாவட்டங்களுக்கு மேலும் ஒரு வார காலத்துக்கு புதிய தளர்வுகள் இன்றி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தற்போது உள்ளது போன்றே மேலும் ஒரு வாரத்துக்கு கோவை மாவட்டத்தில் தளர்வுகளின்றி ஊரடங்கு கடைபிடிக்கப்படும்.  பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கலெக்டர் சமீரன் கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News