கோவை வனத்துறை அலுவலகத்தில் அமைச்சர் ராமச்சந்திரன் திடீர் ஆய்வு

கோவை வனத்துறை அலுவலகத்தில் அமைச்சர் ராமச்சந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.;

Update: 2021-06-10 15:45 GMT

கோவை வனத்துறை அலுவலகத்தில் அமைச்சர் ராமசந்திரன் ஆய்வு செய்தார் அப்போது பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தங்கள், துப்பாக்கிகளை பார்வையிட்டார்.

கோவை ஆர்எஸ் புரம் அப்பகுதியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது கோவை மாவட்டத்தைச் சேர்ந்த வனத்துறை அதிகாரிகள் மற்றும் வன காவலர்கள் வேட்டை தடுப்பு காவலர்கள் கலந்து கொண்டனர்.

வனத்துறைக்கு சொந்தமான இடங்கள் எங்கெங்கு உள்ளது, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடங்கள் எவை என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

தேவையான நடவடிக்கைகள் எடுத்து அந்த நிலங்களை மீட்டு மீண்டும் வனத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர அறிவுரை வழங்கினார்.

அதனை தொடர்ந்து கோவை கோட்டத்தில் வனத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தந்தங்கள் துப்பாக்கிகள் மற்றும் இதர பொருட்கள் குறித்து ஆய்வு நடத்தினார்.

வனவிலங்குகளை காட்டுக்குள் விரட்ட பயன்படுத்தப்படும் வாகனங்களை ஆய்வு மேற்கொண்ட அவர், உரிய பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எந்த வித காரணம் கொண்டும் வனவிலங்குகள் துன்புறுத்தக்கூடாது என அறிவுறுத்தினார்.

மேலும் வனத்துறைக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பு செய்தால் எந்தவித பாரபட்சமும் இன்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும் குறிப்பாக யானைகள் துன்புறுத்தப் படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்தால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

அதற்கு காட்டுப் பகுதியை ஒட்டி உள்ள விவசாயிகளை ஒருங்கிணைத்து தகவல் பரிமாற்றம் என்ற அமைப்பு உள்ளது. அதனை பயன்படுத்தி வன விலங்குகளை விரட்டும் பணியை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்றார்.

மேலும் வனத்துறை அலுவலகத்தில் வனத்துறை செலவினங்கள் பராமரிப்புகள் மற்றும் வனத்துறைக்கு சொந்தமான கல்லூரி என அனைத்து கோப்புகளையும் ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News