குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு நாள்: கோவையில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

கோவையில், குழந்தைத்தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Update: 2021-06-12 07:05 GMT

குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை சமுதாயத்தில் ஏற்படுத்திட, உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ம் நாள் நாடு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

அவ்வகையில், கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக சாய்பாபா காலனி, கவுண்டம்பாளையம், குனியமுத்தூர், காந்திபுரம், கரும்புக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதி மொழி எடுக்கப்பட்டது. கொரோனா கால ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றி சமூக விலகலுடன் உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபீக் தலைமையில், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியபடி உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இதுகுறித்து அவர் கூறுகையில், கல்வி பயின்று, மிளிர வேண்டிய குழந்தை பருவத்தில், வேலைக்கு சென்று பளுவினைச் சுமக்கும் குழந்தைகளை, குழந்தைத் தொழிலாளர் முறையில் இருந்து முழுமையாக விடுவிக்க வேண்டும். அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உறுதி செய்ய தமிழக அர்சு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தற்போது செயல்படுத்தி வருகிறது. சமுதாயத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கான கல்வி உதவி தொகை வழங்க, பல்சமய நல்லுறவு இயக்கம் முன் வரும் என அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News