கோவை விமான நிலையத்தில் பேஸ்ட் வடிவில் கடத்தி வரப்பட்ட 883 கிராம் தங்கம் பறிமுதல்
கோவை விமான நிலையத்தில் ஆடையில் பேஸ்ட் வடிவில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.;
கோவை விமான நிலையத்தில் சார்ஜாவில் இருந்து கோவை வந்த ஏர்அரேபியா விமானத்தில் வந்த ராமசாமி சேகர், தர்ம அருள்நேதாஜி ஆகிய இரு பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது இருவரும் ஆடையில் பேஸ்ட் வடிவில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இருவரிடமும் இருந்து 883 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு 42.82 லட்சம் ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. பிடிபட்ட இரு நபர்களிடம் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.