கோவையில் 338 பேருக்கு கொரோனா தொற்று - 3 பேர் பலி

கோவை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 338 பேர் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2021-07-10 15:00 GMT

கொரோனா பரிசோதனை

கோவை மாவட்டத்தில் இன்று 338 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதன் மூலம், கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 24 ஆயிரத்து 744 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 4108 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 378 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 18 ஆயிரத்து 536 பேராக உயர்ந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்றால் இன்று 3 பேர் உயிரிழந்தனர். இவர்களையும் சேர்த்து, கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2100 ஆக உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News