ஆரம்ப சுகாதார நிலைய பணிக்கு செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்: கோவை மாநகராட்சி
மாநகராட்சி பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலைய பணிக்கு செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம் என, கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.
கோவை மாநகராட்சி பகுதிகளில், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள துணை சுகாதார நிலையங்களில், 20 தற்காலிக செவிலியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இதற்கான நேர்காணல் நடைபெறும் எனவும், மாதம் 11 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படும் எனவும் கோவை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
செவிலியர் படிப்பில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமத்தில் பதிவு பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். வருகின்ற 3 ம் தேதி கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற உள்ளது. கல்வி சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்று, ஆதார் அட்டை ஆகிய அசல் ஆவணங்களை எடுத்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.