கோவை தி.மு.க. பெண் நிர்வாகி வீட்டில் 3-வது நாளாக சோதனை

அறைகள் ஒவ்வொன்றாக சோதனையிட்டு, ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-11-05 05:37 GMT

கோப்புப்படம் 

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகங்களில் தமிழகம் முழுவதும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவையில் ராமநாதபுரத்தில் உள்ள தி.மு.க கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவு மாநில துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் வீடு, அவரது மகன் ஸ்ரீராம் வீடு, தி.மு.க. நிர்வாகி எஸ்.எம்.சாமி வீடு உள்பட 5 இடங்களில் சோதனை நடந்தது.

நேற்று 2-வது நாளாக 4 இடங்களில் சோதனை நடந்தது. காலையில் தொடங்கிய சோதனை இரவு வரை நீடித்தது. இன்று 3-வது நாளாக ராமநாதபுரத்தில் உள்ள மீனா ஜெயக்குமாரின் வீடு மற்றும் பீளமேட்டில் உள்ள அவரது மகன் ஸ்ரீராமின் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அங்குள்ள அறைகள் ஒவ்வொன்றாக சோதனையிட்டு, ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் கோவை சவுரிபாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவன அலுவலகம் மற்றும் கள்ளிமடையில் உள்ள தனியார் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் செந்தில்குமார் வீட்டிலும் சோதனை நடந்தது.

சோதனை நடைபெற்ற 4 இடங்களிலும் காவல்துறையினர்குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மீனா ஜெயக்குமாரின் மகன் ஸ்ரீராம் வீடு மற்றும் தி.மு.க. பிரமுகர் எஸ்.எம்.சாமி வீடு ஆகிய 2 இடங்களில் மட்டும் சோதனை நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News