கோவை வீட்டு வசதி வாரிய நிலுவை தொகை செலுத்த கெடு அறிவிப்பு
வீட்டு வசதி வாரிய விதிமுறைப்படி, நிலுவை தொகை செலுத்தாத பலர், வரும் 30ம் தேதிக்குள் கணக்கை நேர் செய்ய, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், அண்ணா நகர், கணபதி, பிருந்தாவன் நகர், நேரு நகர், இளங்கோ நகர், கோவைப்புதுார், குறிச்சி, பெரியநாயக்கன்பாளையம், பொன்னையராஜபுரம், சிங்காநல்லுார், சவுரிபாளையம், டாடாபாத், உப்பிலிபாளையம், வீரகேரளம், வெள்ளக்கிணறு ஆகிய திட்டங்களில், மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற்று, வாரியத்துக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையை, வட்டி தள்ளுபடியில் ஒரே தவணையாகவோ, மூன்று தவணைகளாகவோ செலுத்தி கிரையப் பத்திரம் பெற்றுக் கொள்ளலாம். என அறிவிக்கப்படிருந்தது
ஆனாலும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், கோவை வீட்டு வசதி பிரிவுக்கு உட்பட்ட மனைகளில், கணபதி, வெள்ளக்கிணறு, பெரியநாயக்கன்பாளையம், வீரகேரளம், காளப்பட்டி மற்றும் முதலிபாளையம் பகுதிகளில் உள்ள 177 ஒதுக்கீடு தாரர்கள், வாரிய விதிமுறைகளின்படி, பணம் செலுத்தும் காலம் முடிவுற்றும், அரசு வட்டி தள்ளுபடி சலுகை பலமுறை அறிவித்தும் பலர் நிலுவை தொகையை செலுத்தவில்லை வரவில்லை.
இது குறித்து கோவை ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில்,
ஒதுக்கீடு தாரர்கள் பின்வரும் ஆவணங்களுடன் கோவை வீட்டு வசதி பிரிவு அலுவலகத்தை அணுக வேண்டும்:
அசல் விண்ணப்பம்
ஒதுக்கீட்டு ஆணை
அசல் ரசீதுகள்
பிற தேவையான ஆவணங்கள்
எச்சரிக்கை
கெடு தேதிக்குள் நிலுவை தொகை செலுத்தப்படாவிட்டால், எவ்வித முன்னறிவிப்புமின்றி ஒதுக்கீடு உத்தரவு ரத்து செய்யப்படும்.
ஒதுக்கீடு தாரர்கள் இந்த அறிவிப்பை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். என தெரிவிக்கப்பட்டுள்ளது
நிலுவை தொகையை செலுத்தாதால், உங்கள் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்பதால், இதனை கவனத்தில் கொள்ளுங்கள். மேலும் தகவலுக்கு, கோவை வீட்டு வசதி வாரிய அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்