கோயம்புத்தூர் வழியே இயக்கப்படும் ரயில்கள் ரத்து
பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக கோயம்புத்தூர் வழியே இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே தெரிவித்துள்ளது;
வஞ்சிபாளையம்-சோமனூா் மற்றும் சாமல்பட்டி - தாசம்பட்டி, இருகூா்-கோவை இடையே ரயில்பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் கோவை-சேலம், கோவை- மேட்டுப்பாளையம் இடையே ரயில் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவை - சேலம் மெமு ரயில் (எண்: 06802) மற்றும் சேலம் - கோவை மெமு ரயில் (எண்: 06803) ஜனவரி மாதத்தில் திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமைகள் தவிர மற்ற அனைத்து நாள்களிலும் முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.
கோவை-மேட்டுப்பாளையம் மெமு ரயில் (எண்: 06812, 06814), மேட்டுப்பாளையம் - கோவை மெமு ரயில் (எண்: 06813, 06815) ஜனவரி 26-ந் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
சொர்ணூர் - கோவை விரைவு ரயில் (எண்: 06458), கோவை - சொர்ணூர் விரைவு ரயில் (எண்: 06459) ஜனவரி 17 முதல் 30-ந் தேதி வரை போத்தனூா் - கோவை நிலையம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் போத்தனூா் - சொர்ணூர் வரை மட்டுமே இயக்கப்படும்.
ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயில் (எண்: 13352) ஜனவரி 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் கோவை ரயில் நிலையம் செல்லாமல், போத்தனூா், இருகூா் வழித்தடத்தில் இயக்கப்படும். போத்தனூரில் இந்த ரயில் நின்று செல்லும்.
எா்ணாகுளம் -பெங்களூரு விரைவு ரயில் (எண்: 12678) ஜனவரி 26, 29 ஆகிய தேதிகளில் கோவை ரயில் நிலையம் செல்லாமல், போத்தனூா், இருகூா் வழித்தடத்தில் இயக்கப்படும்.
செகந்திராபாத் - கோட்டயம் விரைவு ரயில் (எண்: 07125) ஜனவரி 1, 8 ஆகிய தேதிகளில் கோவை ரயில் நிலையம் செல்லாமல், போத்தனூா், இருகூா் வழித்தடத்தில் இயக்கப்படும்.
பிலாஸ்பூா் - எா்ணாகுளம் விரைவு ரயில் (எண்: 22815) ஜனவரி 2, 9 ஆகிய தேதிகளில் கோவை ரயில் நிலையம் செல்லாமல், போத்தனூா், இருகூா் வழித்தடத்தில் இயக்கப்படும்.
பிலாஸ்பூா் - நெல்லை விரைவு ரயில் (எண்: 22619) ஜனவரி 3, 19 ஆகிய தேதிகளில் கோவை ரயில் நிலையம் செல்லாமல், போத்தனூா், இருகூா் வழித்தடத்தில் இயக்கப்படும்.
இதேபோன்று கோவை - தன்பாத் இடையே சேலம், ஈரோடு வழித்தடத்தில் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே தெரிவித்துள்ளது.
தன்பாத் - கோவை வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 03357) ஜனவரி 1-ந்தேதி முதல் 29-ந் தேதி வரை தன்பாத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணிக்குப் புறப்பட்டு, செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு கோவையை வந்தடையும்.
கோவை - தன்பாத் வாராந்திர சிறப்பு ரயில் (எண்:03358) ஜனவரி 4-ந் தேதி முதல் பிப்ரவரி 1-ந் தேதி வரை புதன்கிழமைகளில் இரவு 12.50 மணிக்குப் புறப்பட்டு, வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு தன்பாத் சென்றடையும்.
இந்த ரயில் ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, நெல்லூா், ஓங்கோல், விஜயவாடா, ஏழூரு, ராஜமுந்திரி, விசாகப்பட்டினம், சாம்பல்பூா், ரூா்கேலா, ஹாட்டியா, ராஞ்சி உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.