வேலுமணி கோட்டையில் ஓட்டை: தொண்டாமுத்தூரில் திமுக ஆதிக்கம்!
கோவையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சொந்த தொகுதியான தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட பேரூராட்சிகளில், பல இடங்களை ஆளும் திமுக கைப்பற்றி வருகிறது.;
சற்று முன்புவரை கிடைத்த நிலவரம் வருமாறு:
வெற்றி நிலவரம்:-
தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் வெற்றி அறிவிக்கப்பட்ட 6 வார்டுகளில் 5 வார்டுகளில் திமுக கைப்பற்றி இருக்கிறது. பேரூர் பேரூராட்சியில் முடிவு அறிவிக்கப்பட்ட 8 வார்டுகளில் 7 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது.
இதேபோல், வேடபட்டி பேரூராட்சியில் முடிவு அறிவிக்கப்பட்ட 6 வார்டுகளில் 4 வார்டுகளில் திமுக; தாளியூர் பேரூராட்சியில் முடிவு அறிவிக்கப்பட்ட 6 வார்டுகளில் 5 இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது.