ஊரடங்கு விதிமீறல்: தேநீர் கடைக்கு கோவை மாநகராட்சி அதிகாரிகள் சீல்

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில், வாடிக்கையாளர்களை கடையில் அமர்ந்து தேநீர் அருந்த அனுமதி கடைக்கு, மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Update: 2021-06-28 11:55 GMT

கோவையில், ஊரடங்கு விதிமுறைகளை மீறிய கடைக்கு, சீல் வைத்த அதிகாரிகள்.

தமிழகத்தில், கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகின்றன. இதனால், ஊரடங்கில் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து, அவை இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. கோவையிலும் சில தளர்வுகள் இன்று முதல் அமலாகியுள்ளன. அவ்வகையில், தேநீர் கடைகளிலில், பார்சல் வழங்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள திவான் பகதூர் சாலையில் உள்ள தேநீர் கடை ஒன்று, ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக தகவல் வந்தது. அங்கு விரைந்த கோவை மாநகராட்சி அதிகாரிகள், வாடிக்கையாளர்களை கடையில் அமர்ந்து தேநீர் அருந்த அனுமதித்ததை கண்டனர். இதையடுத்து, அந்த தேநீர் கடையை பூட்டி, அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Tags:    

Similar News