அவினாசி சாலை மேம்பாலம் விரைவில் திறக்கப்படும்: அதிகாரிகள்

கோவை நகரின் நாடித்துடிப்பான அவினாசி சாலையில் கட்டப்படும் பிரம்மாண்ட மேம்பாலம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

Update: 2024-09-18 12:05 GMT

கோவை நகரின் முக்கிய சாலையாக அறியப்படும் அவினாசி சாலையில் தற்போது பிரம்மாண்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த மேம்பாலத்தின் பணிகள் எப்போது முடியும். இது மக்கள் பயன்பாட்டிற்கு எப்போது திறக்கப்படும் என்பது குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது .

கோவையைப் பொறுத்தவரை அவினாசி சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிக்கதாகவே இருந்துள்ளது. கோவை நகரில் முக்கிய சாலை என்றால் அது அவினாசி சாலை தான்.. பல முக்கிய நிறுவனங்களும் இந்த அவிநாசி சாலையில் தான் செயல்பட்டு வருகிறது. இதனால் அங்குப் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த இங்கு சுமார் 10.1 கிமீ தூரத்தில் மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. கட்டுமான பணிகளும் படுவேகமாக நடந்து வருகிறது.

நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூற்றுப்படி, மேம்பாலப் பணிகளில் 70% முடிவடைந்துள்ளது. பிரதான பாலப் பணிகள் 2024 டிசம்பர் இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது

இதற்கிடையே இந்த முக்கிய அவினாசி சாலை மேம்பாலத்தின் பணிகள் இன்னும் 3- 4 மாதங்களில் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், "மேம்பாலப் பணிகள் விரைவாக நடந்து வருகிறது. 3, 4 மாதங்களில் இந்தாண்டு இறுதிக்குள் பாலத்தைத் திறக்கவுள்ளோம். அதற்குள் தேவையான பணிகளை முடித்துவிடுவோம் என நம்புகிறோம்" என்றார்.

இந்தச் சூழலில் உப்பிலிபாளையம் முதல் 10.1 கி.மீ. தொலைவிற்கு ரூ. 1,621 கோடி செலவில் அமைக்கப்படும் இந்த மேம்பாலம் டிராபிக் பாதிப்பைப் பெருமளவு குறைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. நான்கு வழிச் சாலையாக அமையும் இந்த மேம்பாலத்தில் மொத்தம் 304 தூண்கள் இருக்கும். அதில் சுமார் 250 தூண்களை அமைக்கும் பணிகள் முடிந்துவிட்டன. இன்னும் 50 தூண்கள் மட்டுமே அமைக்கப்பட வேண்டும்.

அதற்கான பணிகள் படுவேகமாக நடந்து வரும் நிலையில், புத்தாண்டிற்குள் அந்த பணிகள் முடியும் எனத் தெரிகிறது. ஹோப் காலேஜ் அருகே அருகே 52 மீட்டர் ஸ்டீல் ஸ்பானை முழுவதுமாக கான்கிரீட் மற்றும் டாப்பிங் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முழுமையாக நிறைவடைய இந்தாண்டு இறுதி வரை ஆகும்

இந்த 1,621 கோடி திட்டம் நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

Tags:    

Similar News