நாடாளுமன்ற தேர்தல் பாஜகவுக்கு பலப்பரீட்சை: அண்ணாமலை பரபரப்பு பேச்சு

Coimbatore News, Coimbatore News Today- வருகிற நாடாளுமன்ற தேர்தல் பாஜகவிற்கான பலப்பரீட்சை என்பதால், கூட்டணியைப் பற்றி கவலைப்படாமல் பணியாற்ற வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.;

Update: 2023-05-19 08:13 GMT

Coimbatore News, Coimbatore News Today- கோவையில் நடைபெற்ற பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில், அண்ணாமலை பேசி்னார்.

Coimbatore News, Coimbatore News Today- பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

தேனீக்களைப் போல சுறுசுறுப்பாக பணி செய்ய வேண்டும். தமிழகத்தில் இருந்து எத்தனை எம்.பி.களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பபோகின்றோம் என்பதை திட்டமிட வேண்டும். உள்நாட்டு அச்சுறுத்தல், அண்டை நாட்டு அச்சுறுத்தல் அனைத்தும் எதிர்கொண்டு பிரதமர் சிறப்பாக பணியாற்றி வருகிறார். இந்திய சரித்தரத்தில் மிக அமைதியான வாழ்க்கையை நாம் வாழ்ந்து வருகிறோம். பிரதமர் மோடியின் நடவடிக்கையால் ஜம்மு காஷ்மீரில் ஒரு கோடி பேர் சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளனர்.

கோவையில் வெடிகுண்டு கலச்சாரம், துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்கி உள்ளது. எப்போது கொலை நடக்கும், கலவரம் நடக்கும் என்ற அச்சம் தமிழகத்தில் உள்ளது. மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக நாம் மாற போகிறோம். அதற்கான அடிப்படை பணியைதான் பிரதமர் மோடி செய்து வருகிறார்.

இந்தியாவின் பொருளாதரம் உயர உயர தமிழ்நாட்டின் பொருளாதரம் குறைந்து வருகிறது. மற்ற மாநிலங்கள் முன்னேறி வருகிறது. ஆனால் திராவிட அரசின் 30 சதவீத கமிஷன் தமிழ்நாட்டை பின்னோக்கி கொண்டு செல்கின்றது. மே 30 முதல் ஜுன் 30 வரைக்கும் பிரதமரின் நலத்திட்டங்களை பெரிய இயக்கமாக மக்களிடம் எடுத்து செல்கிறோம்.

பாஜக ஆட்சிக்கு வந்த போது 18 ஆயிரம் கிராமத்தில் இந்தியாவில் மின்சாரம் இல்லை, ஆனால் இப்போது மின்சாரம் இல்லாத கிராமமே கிடையாது. திராவிட மாடல் அரசு மாதிரி, பிரதமர் வீர வசனம் பேசுவது இல்லை.

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் என்பது பாஜகவிற்கு பலபரீட்சை. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எல்லா தீய சக்திகளும் ஒரு அணியில் திரண்டு உள்ளனர். பாஜக தொண்டர்கள் வீடுவீடாக சென்று மக்களை சந்திக்க வேண்டும், நாடாளுமன்ற தேர்தல் நமக்கு ஆரம்பித்து விட்டதால் பணியை தற்போதே தொடங்குங்கள்.

வெற்றி தோல்வியை தாண்டி உழைப்பு போடுங்கள். கூட்டணியில் இருக்கிறோம், கூட்டணியில் இல்லை, தனியாக போட்டி போடுகிறோம், போட்டி போட்டும் வெற்றி பெறவில்லை போன்ற எண்ணங்களை தூக்கிப்போட்டு உழையுங்கள் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசினார்.

Tags:    

Similar News