செல்லும் இடமெல்லாம் அமோக வரவேற்பு: நடிகர் கமல்
கோவை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.;
கோவை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "மநீமவின் 5 வது கட்ட பிரச்சாரம் கோவையில் துவங்கியுள்ளது. செல்லும் இடமெல்லாம் மநீமவிற்கு அமோக வரவேற்பு கிடைக்கிறது.
கோவையில் மநீமவின் விளம்பர பதாகைகளை அகற்றி கூடுதல் விளம்பரம் அளித்துள்ளனர். பதாகைகளை அகற்றிய அமைச்சர், மாநகராட்சி அதிகாரிகளுக்கு நன்றி. விளம்பர பதாகைகளை அகற்றுவதில் காட்டும் ஆர்வத்தை மக்கள் பணியில் காட்டியிருந்தால், நாங்கள் அரசியலுக்கு வந்திருக்க மாட்டோம்" என அவர் தெரிவித்தார்.