விருகம்பாக்கம் எம்எல்ஏ பிரபாகர் ராஜா நிவாரண உதவி வழங்கல்
விருகம்பாக்கம் எம்எல்ஏ பிரபாகர் ராஜா நிவாரண உதவிகளை வழங்கினார்.
தொடர் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்வாழ்வு அமைச்சர் சுப்பிரமணியன் தலைமையில் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஏ எம் வி பிரபாகர் ராஜா நிவாரண உதவி வழங்கினார்.
விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராணி அண்ணா நகர் குடியிருப்பு பகுதியில் 1754 பேருக்கு வெள்ள நிவாரண உதவி வழங்கப்பட்டது.
கேகே நகர் அசோக்நகர் வடபழனி குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்து இருப்பதால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்த மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.