மேல்படிப்புக்கு வெளிநாட்டில் அட்மிஷன்: மோசடிதம்பதிகளை அள்ளியது போலீஸ்
வெளிநாட்டில் படிக்க 'அட்மிஷன்' வாங்கித் தருவதாக ரூ.38 லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.;
சாலிகிராமம், ஆற்காடு சாலையில் வசிப்பவர் வெங்கடேஷ் (23). இவர், மேல் படிப்பிற்காக வெளிநாடு செல்ல முயற்சித்து வந்தார்.
அப்போது, அதே அடுக்குமாடி குடியிருப்பின் பக்கத்து பிளாக்கில் உள்ள கார்த்திக் (35), கார்த்திகா (30) தம்பதி, வெளிநாட்டில் படிக்க 'அட்மிஷன்' வாங்கித் தருவதாகக் கூறி, வெங்கடேஷிடம் கடந்த டிசம்பரில், ரூ.38.90 லட்சம் ரூபாய் பெற்றனர்.
ஆனால், அட்மிஷன் வாங்கிக் கொடுக்காமலும், பணத்தை திருப்பித் தராமலும் ஏமாற்றி வந்தனர். இதுகுறித்து நீதிமன்ற வழிகாட்டுதலின் படி, விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மகாபலிபுரத்தில் பதுங்கி இருந்த தம்பதியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்