தமிழக தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் மின்தடை ஏற்படுத்தி அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதாக திமுகவினர் புகார் தெரிவித்துள்ளனர்.
நள்ளிரவில் மின்தடையை ஏற்படுத்தி அதிமுக பணப்பட்டுவாடா செய்ததாக திமுக பகுதி செயலாளர் வாசு புகார் தெரிவித்துள்ளார். அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்யும் போது திமுகவினர் கையும் களவுமாக பிடித்தனர். பணப்பட்டுவாடா குறித்து அயனாவரம் காவல் நிலையத்தில் வாசு புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.