100 ஆக்சிஜன் செறிவூட்டிகள்: சென்னை மாநகராட்சி ஆணையரிடம் ஒப்படைப்பு!

எம்.பி., எம்எல்ஏக்கள் வழங்கப்பட்ட 100 ஆக்சிஜன் செறிவூட்டிகள் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங்கிடம் ஒப்படைக்கப்பட்டது.;

Update: 2021-06-03 15:34 GMT

எம்பி., எம்எல்ஏக்கள் வழங்கிய ஆக்சிஜன் செறிவூட்டிகளை அமைச்சர் சேகர்பாப, உதயநிதி எம்எல்ஏ ஆகியோர் சென்னை மாநகராட்சி ஆணையரிடம் ஒப்படைத்தனர்.

சென்னை மாநகராட்சி அலுவலகம் ரிப்பன் மாளிகையில் இன்று 100 ஆக்சிஜன் செறிவூட்டிகளை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடியிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், திருவொற்றியூர், எழும்பூர், ராயபுரம், தி-நகர் ஆகிய தொகுதிகளின் எம்.எல்.ஏக்கள் மற்றும் வடசென்னை எம்.பி. சார்பில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 ஆக்சிஜன் செறிவூட்டிகளை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோரால் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடியிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

Similar News