வெளிநாடுகளிலிருந்து மருத்துவ உபகரணங்கள் சென்னை விமான நிலையம் வந்தன!

வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு மருத்தவ உபகரணங்கள் வந்தடைந்தன.

Update: 2021-06-07 06:07 GMT
சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்த மருத்துவ உபகரணங்களை இறக்கும் பணி.

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தமிழகத்தில் வேகமாக பரவியது.தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி நடவடிக்கைகளால், தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனாலும் தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்புகளை முற்றிலுமாக தடுத்துநிறுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஆக்சிஜன் செறிவூட்டிகள், வெண்டிலேட்டா் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை தமிழக அரசு வெளிநாடுகளிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் பெருமளவு வரவழைத்து வருகிறது. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் டூண்டிகல்லிலிருந்து இந்திய விமானப்படை தனி விமானம் ஒன்று சென்னை பழைய விமானநிலையம் வந்தது.

அதில் 65 ஆக்சிஜன் செறிவூட்டிகள், வெண்டிலேட்டா்கள், முகக்கவசங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் என மொத்தம் 1.5 டன் மருத்துவ பொருட்கள் அந்த விமானத்தில் வந்தன.

இந்திய விமானப்படையினா் கண்காணிப்பில் விமானநிலைய லோடா்கள் அந்த மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பாா்சல்களை விமானத்திலிருந்து இறக்கி,விமானநிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

அதன்பின்பு விமானநிலைய அதிகாரிகள் தமிழக அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.அவா்கள் வாகனங்களில் ஏற்றி சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அதைப்போல் தாய்லாந்து நாட்டிலிருந்து வந்த சரக்கு விமானம் சென்னை பழைய விமானநிலையம் வந்தது.அதில் தாய்லாந்து நாட்டில் வசிக்கும் தமிழ்சங்கத்தினா் 11 செறிவூட்டிகளை தமிழ்நாடு அரசுக்கு அனுப்பியிருந்தனா். சுங்கத்துறையினா் மருத்துவ உபகரணங்களுக்கான முன்னுரிமை அளித்து உடனடியாக டெலிவரி கொடுத்து அனுப்பினா்.

#tamilnadu

#MedicalEquipment #abroad #arrived #ChennaiAirport

#வெளிநாடுகளிலிருந்து #மருத்துவ #உபகரணங்கள் #சென்னை #விமானநிலையம் #வந்தன

Tags:    

Similar News