புனேவிலிருந்து 4.20 லட்சம் கோவீஷீல்ட் தடுப்பூசி மருந்துகள் சென்னை வந்தன

புனேவில் இருந்து 4 லட்சத்து 20 ஆயிரத்து 570 கோவீஷீல்ட் தடுப்பூசிகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தன,

Update: 2021-06-01 14:44 GMT

புனேவில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்த கோவிஷீல்டு மருந்துகள் இறக்குமதி செய்த காட்சி.

தமிழகத்தில் கொரோனா தொற்றும் குறைக்கும் வகையில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்திற்கு வழங்கப்படும் தடுப்பூசியின் அளவு மிகக் குறைவாக உள்ளது.

எனவே தமிழகத்துக்கு மத்திய மருந்து தொகுப்பில் இருந்து கூடுதலாக தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் எனவும்,  என தமிழக அரசு கோரிக்கை வைத்தது.

இதையடுத்து மத்திய அரசின் உத்தரவின் பேரில் புனேவில் உள்ள மத்திய மருந்து சேமிப்பு கிடங்கில் இருந்து கோவிஷீல்டு மற்றும் கோவக்சின் தடுப்பூசி மருந்துகள் தமிழகத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 45 வயது மேற்ப்பட்டவர்களுக்கு போடப்படும் தடுப்பூசிகள் புனேவில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் 52 பார்சல்களில் 4 லட்சத்து 20ஆயிரத்து 570 கோவீஷீல்ட் தடுப்பூசி மருந்துகள் இன்று சென்னை கொண்டு வரப்பட்டது. இதனை தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்னை பழைய விமானநிலையத்தில் பெற்றுக்கொண்டனா்.

அதன்பின்பு குளிா்சாதன வசதியுடைய வாகனத்தில் ஏற்றப்பட்டு சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் அலுவலகத்தில் உள்ள மருந்து பாதுகாப்பு வைப்பு அறைக்கு எடுத்துச்செல்லப்பட்டது. நாளை இந்த தடுப்பூசி மருந்துகள் தமிழகத்தின் சில பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும் என்று சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.

Tags:    

Similar News