திமுக அரசை கண்டித்து அதிமுக போராட்டம் : எடப்பாடி பழனிசாமி ஆவேச பேச்சு
திமுக அரசை கண்டித்து அதிமுக நடத்திய போராட்டத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசினார்.;
சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை எனக் கூறி தமிழகம் முழுவதும் அதிமுக போராட்டம்.
போராட்டத்தின் போது முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி பேசியதாவது:
திமுக சார்பில் 505 அறிவிப்புகளை தேர்தல் வாக்குறுதியாக கூறினர். அதில், முக்கியமான சில விஷயங்களை கூட திமுக நிறைவேற்றவில்லை. பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு, வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கை.
ஸ்டாலின் முதல்வர் ஆனதும் நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை.
மக்கள் கொந்தளிப்புடன் கேள்வி கேட்கும் நிலையில் உள்ளதால், மக்களை திசைத்திருப்ப அதிமுக முன்னாள் அமைச்சர் வீடுகளில் சோதனை செய்கின்றனர், பொய் வழக்கு போடுகின்றனர் என்று கண்டனம் தெரிவித்தார்.