சட்ட மாமேதை சிலைக்கு வைகோ மாலை அணிவிப்பு

அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ மாலை அணிவித்தார்.;

Update: 2021-04-14 10:18 GMT

இந்திய வரலாற்றில் இந்திய அரசாட்சிக்கு சட்ட வரையறைகளை உருவாக்கியவர் அம்பேத்கர். அவருக்கு இன்று பிறந்தநாள். அவரை போற்றும் விதமாக இந்தியா முழுவதும் அவருக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது. 

அந்த வகையில், புரட்சியாளர் அம்பேத்கர் 130-வது பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது சிலைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் ம.தி.மு.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News