நாங்க வேற மாதிரி, முடிந்தால் தொட்டுப்பாரு - கனிமொழி ஆவேசம்
யாரும் மிரட்டி விட முடியாது. நாங்கள் எழுந்து நின்றால் தாங்க மாட்டீர்கள் என்று கூறி கனிமொழி. அண்ணாமலையை எச்சரித்தார்.
அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை, பிரச்சாரத்தின் போது, கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை அடித்து பல்லை உடைத்து விடுவேன் என்றும், திமுக-காரனை எச்சரிக்கை செய்து விட்டு செல்கிறேன்.
நான் வன்மத்தை கையிலெடுக்க தயாராக இல்லை. அகிம்சைவாதியாக அரசியல் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன். எனக்கு இன்னொரு முகம் இருக்கிறது. அது கர்நாடகா முகம். அதை காட்ட வேண்டாம் என்று நினைக்கிறேன் என்றும் அதிரடியாக பேசியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வண்ணமாக பேசிய கனிமொழி அவர்கள், திமுகவினர் மீது நீ கை வைத்து பார். உங்கள போல் நாங்கள் எத்தனை பேரை பார்த்துவிட்டு வந்திருப்போம். எங்களது உடன்பிறப்புகளை யாரும் மிரட்டி விட முடியாது. நாங்கள் எழுந்து நின்றால் தாங்க மாட்டீர்கள் என்று அதிரடியாக பதிலடி கொடுத்துள்ளார்.