கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்தில் மு.க.ஸ்டாலின்- உதயநிதி நலஉதவி!
மறைந்த முன்னாள் முதல்வர் வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்தில் மு.க.ஸ்டாலின், உதயநிதி நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.;
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.
பின்னர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்தநிலையில், கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்தில் அவரது திருவுருவப்படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி எம்எல்ஏ உள்பட கட்சியினர், குடும்பத்தினர் மரியாதை செலுத்தினர். பின்னர் ஏழை-எளியாருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.