தமிழகத்தில் வீடு-வீடாக சென்று கொரோனா பரிசோதனை: எதிர்க்கட்சி தலைவர்

தமிழகத்தில் வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Update: 2021-06-04 15:59 GMT

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களை சந்தித்தபோது, கடந்த ஆட்சி காலத்தில் காவேரி - குண்டாறு இணைப்பு திட்டத்தின் பணிகளை துவங்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தோம். இதுகுறித்து தற்போது கூட பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளோம். இதற்கான அனுமதியை மத்திய அரசு சார்பாக வழங்கப்பட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழகத்தில் அதிகபட்சமாக 6900 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. அப்போது தமிழகத்தில் 257 கொரோனா பரிசோதனை மையங்கள் இருந்த நிலையில் தற்போது 259  மையங்களே உள்ளன.  கொரோனா பரிசோதனை செய்த நபர்கள் முடிவுகளை தெரிந்துகொள்ள மூன்று நாட்கள் ஆகிறது. எனவே வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை செய்து முடிவுகளை விரைவாக அறிவிக்க வேண்டும் என்று கூறினார்.

Tags:    

Similar News