மணலி அருகே ஏரியில் குளித்த கூலித்தொழிலாளி சேற்றில் சிக்கி உயிரிழப்பு

ஏரியில் குளித்த கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2022-05-30 01:30 GMT

உயிரிழந்த கூலித்தொழிலாளி அருண்.

திருவொற்றியூர் அடுத்த மணலி அருகே சடையங்குப்பத்தை சேர்ந்தவர் அருண் (47), கூலித்தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா இவர்களுக்கு சரண்யா(20) என்ற மகளும், சரண் (19) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள ஏரியில் அருண் குளிக்கச் சென்றார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அதில் சேற்றில் சிக்கி, மூச்சுத்திணறி உயிரிழந்தார். இதனை அவ்வழியாக சென்றவர்கள் அருகே உள்ள கிராமத்திற்கு தகவல் தெரிவித்து, பின்னர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சாத்தாங்காடு போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

வெயிலின் தாக்கம் அதிகம் என்பதால் அருகே உள்ள ஏரியில் குளிக்கச் சென்ற கூலித் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News