கள்ளக்காதல் பிரச்சனையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு: 3 பேர் கைது
திருவொற்றியூர் அருகே கள்ளக்காதல் பிரச்சனையில் இளைஞரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;
திருவொற்றியூர் அடுத்த ராயபுரம் கல்மண்டபம் பகுதியில் கானத்தூர் ஜெயச்சந்திரன் என்பவர் காரில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த இருவர் தாக்கி கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக வந்த ராயபுரம் காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த ஜெயச்சந்திரனை ராயபுரம் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்து விட்டு பின்னர் சம்பவம் தொடர்பாக இமானுவேல்(29), மற்றும் சாமுவேல்(18) ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இம்மானுவேல் என்பவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னதாக ரேஷ்மா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் இம்மானுவேலிற்கும் ரேஷ்மாவின் தோழி அனு என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறி இமானுவேல் ரேஷ்மா ஆகியோர் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் ரேஷ்மா, ஜெயச்சந்திரன் என்ற விக்கி உடன் தொடர்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், நேற்று இரவு ஜெயச்சந்திரன் என்ற விதி மற்றும் ரேஷ்மா மற்றும் தோழி அனு ஆகியோர் ஒரே காரில் வந்து கொண்டிருந்தபோது இமானுவேல் மற்றும் அவரது தம்பி சாமுவேல் ஆகியோர் காரை வழிமறித்து ஜெயச்சந்திரன் என்ற விக்கியை தாக்கி கத்தியால் குத்தியுள்ளனர்.
இமானுவேல் மற்றும் சாமுவேல் மற்றும் கூட்டாளி வசந்த் ஆகிய மூன்று பேரை ராயபுரம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.