அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் நகைகளை திருடிய பெண் கைது
அரசு மருத்துவமனைகளில் உறவினர்களைப் போல நடித்து நோயாளிகளிடம் நகைகளை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கோவிலம்பாக்கம் நன்மங்கலத்தில் வசித்து வருபவர் ராமு (32). இவரது மனைவியின் பிரசவத்திற்காக கடந்த 28ம் தேதி திருவல்லிக்கேணி கஸ்துாரிபாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் ராமுவின் மனைவி அணிந்திருந்த 41 கிராம் எடையுள்ள தங்க தாலி, வெள்ளி கொலுசு ஆகியவற்றை கழட்டி சிறிய பையில் வைத்திருந்தனர்.
ராமுவின் மனைவி அனுமதிக்கப்பட்ட பிரசவ வார்டில் இருந்து வெளியே வந்த பெண் கையில் ராமுவின் மனைவி நகைகள் வைத்த பை எடுத்து வந்துள்ளார்.
இதனை கண்ட ராமு அந்தப் பெண்ணை அழைத்தபோது வேகமாக வெளியே ஓடினார். ராமுவும் விடாமல் விரட்டிச் சென்று மடக்கிப்பிடித்து திருவல்லிக்கேணி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் அப்பெண்ணை சோதனை செய்ததில் ராமுவின் மனைவி தாலிச்சரடு, கொலுசு வைத்திருந்த பையை நைசாக திருடி வந்தது தெரியவந்தது.
பெண்ணின் உறவினரைப்போல மருத்துவமனைக்குள் சென்று நோட்டமிட்டு நோயாளிகள் வைத்திருக்கும் பையை இப்பெண் திருடிவந்துவிடுவார் எனவும், இவர் பெரம்பூர் வீனஸ் ரோட்டில் வசிக்கும் ரமேஷ் என்பவரது மனைவி பிரீத்தி (27) என்பதும் விசாரைணயில் தெரிய வந்தது.
இவர் சென்னையில் பல மருத்துவமனைகளில் இதுபோல கைவரிசை காட்டியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பிரீத்தியை போலீசார் கைது செய்து திருடிய 5 சவரன் நகைகளை மீட்டனர்.