தமிழக அமைச்சரவை நாளை பதவியேற்பு: முழு விபரங்கள்
தமிழக அமைச்சரவை பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை பொறுப்பேற்க நிலையில் அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர் அதற்கான தமிழக அமைச்சரவை பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு,
முதல்வர் ஸ்டாலின் - பொது, பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி, மற்ற அகில இந்திய பணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை, சிறப்பு முயற்சி, சிறப்புத் திட்ட செயலாக்கம், மாற்றுத் திறனாளிகள் நலன் ஆகிய துறைகளை ஏற்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
துரை முருகன் - சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத் திட்டம், மாநில சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, தேர்தல்கள் மற்றும் கடவுச்சீட்டகள், கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள்.
கே.என். நேரு - நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி, குடிநீர் வழங்கல்
இ. பெரியசாமி - உயர்கல்வி உள்ளிட்ட தொழிற்கல்வி, மின்னணுவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல்.
பொன்முடி - உயர்கல்வித் துறை, தொழிற்கல்வி, மின்னணுவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல்
எ.வ. வேலு - பொதுப் பணிகள் (கட்டடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்
எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் - வேளாண்மை, வேளாண்மை பொறியியல், வேளாண் பணிக் கூட்டுறவு சங்கங்கள், தோட்டக்கலை, கரும்புத் தீர்வை, கரும்புப் பயிர் மேம்பாடு மற்றும் தரிசு நில மேம்பாடு.
கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் - வருவாய் மாவட்ட வருவாய் நிர்வாகம் துணை ஆட்சியர்கள் பேரிடர் மேலாண்மை
தங்கம் தென்னரசு - தொழில்துறை தமிழ் ஆட்சி மொழி மற்றும் பலர் தமிழ் பண்பாட்டுத் துறை தொல்பொருள்
எஸ் ரகுபதி - சட்டம் நீதிமன்றங்கள் சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டம்
சு. முத்துசாமி - வீட்டுவசதி ஊரக வீட்டுவசதி நகரமைப்பு திட்டமிடல் மற்றும் வீட்டு வசதி மேம்பாடு இட வசதி கட்டுப்பாடு நகரத் திட்டமிடல் நகர்ப் பகுதி வளர்ச்சி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்
கே .ஆர். பெரியகருப்பன் - ஊரக வளர்ச்சி ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள் வறுமை ஒழிப்புத் திட்டங்கள் ஊரக கடன்கள்
தா .மோ. அன்பரசன் - ஊரகத் தொழில்கள் குடிசை தொழில்கள் உட்பட சிறு தொழில் குடிசை மாற்று வாரியம்
மு.பெ.சாமிநாதன் - செய்தி மற்றும் விளம்பரம் திரைப்பட தொழில் நுட்பவியல் மற்றும் திரைப்பட சட்டம் பத்திரிக்கை ஆச்சு காகித கட்டுப்பாடு எழுதுபொருள் மற்றும் ஆட்சித்துறை மற்றும் அரசு அச்சகம்
பி .கீதாஜீவன் - மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட சமூக நலம் ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் குற்றவாளிகள் சீர்திருத்த நிர்வாகம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மற்றும் இரவலர் காப்பு இல்லங்கள் மற்றும் சமூக சீர்திருத்தம் மற்றும் சத்துணவுத் திட்டம்
அனிதா ஆர். ராதா கிருஷ்ணன் - மீன்வளம் மற்றும் மீன் வளர்ச்சிக்கழகம் கால்நடை பராமரிப்பு
ஆர்.எஸ் ராஜகண்ணப்பன் - போக்குவரத்து நாட்டுடமையாக்கப்பட்ட போக்குவரத்து மற்றும் இயக்கூர்தி சட்டம்
கா.ராமச்சந்திரன் - வனம் (வனத்துறை அமைச்சர்)
திரு அர. சக்கரபாணி - உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் நுகர்வோர் பாதுகாப்பு விலை கட்டுப்பாடு
வி .செந்தில் பாலாஜி - மின்சாரம் மரபுசாரா எரிசக்தி மேம்பாடு மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் கருப்பஞ் சாற்றுக் கசண்டு (மொலாசஸ்)
ஆர்.காந்தி - கைத்தறி மற்றும் துணிநூல் கதர் மற்றும் கிராம தொழில் வாரியம் பூதானம் மற்றும் கிராம தானம்
மா.சுப்பிரமணியன் - மக்கள் நலவாழ்வு மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலன்
பி. மூர்த்தி - வணிக வரிகள் பதிவு மற்றும் முத்திரைத்தாள் சட்டம் எடைகள் மற்றும் அளவைகள் கடன் கொடுத்தல் குறித்த சட்டம் உள்ளிட்ட கடன் நிவாரணம் சீட்டுகள் மற்றும் கம்பெனிகள் பதிவு
எஸ்.எஸ் .சிவசங்கர் - பிற்படுத்தப்பட்டோர் நலன் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலன்
பி.கே. சேகர்பாபு - இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள்
பழனிவேல் தியாகராஜன் - நிதித்துறை திட்டம் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த அரசு ஊழியர்களின் ஓய்வு ஊதியம் மற்றும் ஓய்வூதியம் சலுகைகள்
சா.மு. நாசர் - பால்வளம் மற்றும் பால்பண்ணை வளர்ச்சி
செஞ்சி கே. எஸ். மஸ்தான் - சிறுபான்மையினர் நலன் வெளிநாடு வாழ் தமிழர் நலன் அகதிகள் வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் வக்பு வாரியம்
அன்பில் மகேஷ் பொய்யாமொழி - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பள்ளிக் கல்வி
சிவ.வீ. மெய்யநாதன் - சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை
சி. வி கணேசன் - தொழிலாளர்கள் நலன் மக்கள் தொகை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரம் மற்றும் ஊரக வேலைவாய்ப்பு
த. மனோ தங்கராஜ் - தகவல் தொழில்நுட்பத் துறை
மா.மதிவேந்தன் - சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகம்
என்.கயல்விழி செல்வராஜ் - ஆதிதிராவிடர் நலன் மலைவாழ் பழங்குடியினர் மற்றும் கொத்தடிமை தொழிலாளர்கள் நலன்.