நியாய விலை கடையில் திடீரென முதல்வர் ஆய்வு
நியாய விலைக்கடையில் திடீரென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.;
சென்னை சத்யா நகர் பகுதி கூட்டுறவு நியாய விலை கடையில் சிறப்பு பொங்கல் தொகுப்பு பொருட்கள் முறையாக வழங்கப் படுகிறதா என்று திடீர் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு சிறப்பு பொங்கல் தொகுப்பினை முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கினார்.
இந்த ஆய்வின்போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பிகே சேகர்பாபு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.