சென்னை சரவணா ஸ்டோருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்தது மாநகராட்சி
கொரோனா விதிமுறைகளை மீறியதாக சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோருக்கு, ரூ.5 லட்சம் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
சென்னை : கொரோனா விதிமுறைகளை மீறியதாக சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோருக்கு ரூ.5 இலட்சம் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி விற்பனையை அதிகரிக்க அளவுக்கு அதிகமான வாடிக்கையாளர்களை கடைக்குள் அனுமதித்தாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சரவணா ஸ்டோருக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.