பட்டாசுக்கு அனுமதி கொடுங்க: மாநில முதல்வர்களுக்கு அண்ணாமலை கடிதம்

தொழிலாளர்களின் வாழ்வு சிறக்க, தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும் என்று, அனைத்து மாநில முதல்வர்களுக்கும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.;

Update: 2021-10-17 03:30 GMT

கோப்பு படம்

இது தொடர்பாக, அனைத்து மாநில முதல்வர்களுக்கும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில், சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமானவர்கள், பட்டாசு உற்பத்தியிலும்; 7 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பட்டாசு வினியோகத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். பட்டாசு தொழில், தென் மாவட்டங்களின் வாழ்வாதாரம். இந்தியாவின் 90 சதவீத பட்டாசுகள், இங்குதான் தயாரிக்கப்படுகின்றன.

கொரோனா பெருந்தொற்று பாதிப்பில் மக்கள் துயருற்ற நிலையில், தன் நாட்டு மக்கள் இந்த சோர்வில் இருந்து மீள, ஜப்பான் நாடு, பட்டாசு திருவிழாவை நடத்தி, அவர்கள் நாட்டு மக்களுக்கு உற்சாகம் அளித்தது.

பட்டாசு வெடிப்பது தீபாவளி பண்டிகையின் ஒரு அங்கம். கொரோனா பாதிப்பில் இருந்து தேசம் மீண்டெழும் நிலையில், மக்களை உற்சாகப்படுத்த, தங்கள் மாநிலத்தில் மக்கள் பட்டாசு வெடித்து மகிழ, மாநில முதல்வர்கள் எந்த ஒரு இடையூறும் ஏற்படுத்த வேண்டாம். பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும் என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, இதுதொடர்பாக மாநில முதல்வர்கள் சிலருக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News