ஆவடி: மின்சார ரயிலை மறித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்

மின்சார ரயிலை மறித்து ஆவடி ரெயில் நிலையத்தில் மாணவர்கள் தண்டவாளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2021-10-15 04:45 GMT

ஆவடியில், மின்சார ரயிலை மறித்த மாணவர்கள் தண்டவாளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆவடி அருகே, அண்ணனூர் ரயில் நிலையத்தில் மின்சார ரயிலில் ஏறிய ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர் ஒருவர்,  ரயிலில் இருந்த சென்னை மாநிலக்கல்லூரி மாணவர்களில் ஒருவரது பையை சோதனை செய்ததாக கூறப்படுகிறது. அந்த பையில் சுமார் 10 முதல் 15 எண்ணிக்கையில் ரயில் தண்டவாளத்தில் இருக்கும் கற்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, ஆவடி ரயில் நிலையம் வந்ததும்,  அந்த மாணவரை ரயில்வே போலீசில் ஒப்படைத்தார். இதனால் ஆத்திரமடைந்த சகமாணவர்கள்,  50-க்கும் மேற்பட்டோர், ரயில்வே போலீசாரின் செயலை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை  ரயில்வே போலீசார் சமாதானப்படுத்தினர். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.இதனால் அரை மணிநேரம் அந்த மின்சார ரயில் தாமதமாக சென்றது.

Tags:    

Similar News