சசிகலா அதிமுக கட்சிக்கு வந்தால் பலமா ? பலவீனமா ? முக்கிய நிர்வாகி பரபரப்பு பேட்டி

சசிகலா அதிமுக கட்சிக்கு வந்தால் பலமா ? பலவீனமா ? என்று ராயபுரத்தில் முக்கிய நிர்வாகி பரபரப்பு பேட்டி அளித்தார்.;

Update: 2021-10-27 12:47 GMT

ராயபுரத்தில் பேட்டி அளித்த எம்ஜிஆர்வி.ராமச்சந்திரன்.

அதிமுகவில் தற்போது இருக்கும் தலைமை கட்சியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார்கள் எனவும் மற்றவர்கள் தாங்களாக எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என அதிமுக  எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் ஜூனியர் எம்.ஜி.ஆர். வி.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் தற்போது ஏற்பட்டு வரும் குழப்பமான சூழல் குறித்து அதிமுக கழக எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் ஜூனியர் எம்.ஜி.ஆர். வி.ராமச்சந்திரன் மற்றும் அதிமுக தேர்தல் பிரிவு துணை செயலாளர் எம்.என் வைரமுத்து ஆகியோர் சென்னை ராமாபுத்தில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

*முன்னதாக பேசிய ராமச்சந்திரன் கூறியதாவது.

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா இருக்கும்போது கட்சியை யாராலும் உடைக்க முடியவில்லை எனவும், தற்போது மக்கள் பன்னீர் மற்றும் பழனிச்சாமி ஆகியோரை தலைமையாக தேர்ந்தெடுத்துள்ளனர். கட்சியில் நிறைய பிரச்சனைகள் ஏற்பட்டு தற்போது தான் சுமுகமாக சென்று கொண்டிருக்கிறது எனவும், இந்த நேரத்தில் கட்சியில் உள்ளவர்கள் தனித்தனியாக பேட்டி அளித்து கொண்டு பிரச்சனையை ஏற்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

தற்போது இருக்கும் தலைமை கட்சியை சிறப்பாக வழி நடத்தி கொண்டிருகிறார்கள். மற்றவர்கள் நீங்களாக முடிவெடுக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.

*பின்னர் பேசிய அம்மன் பி வைரமுத்து,*

சசிகலா வருகையை பற்றி கட்சி தான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறிய அவர், தலைமை என்ன முடிவெடுகிறதோ அதன்படி நாங்கள் நடப்போம் என தெரிவித்தார்.

நான்கு பேரில் ஐந்தாவதாக ஒருவர் வந்தால் அது பலம் தான், சசிகலா வந்தால் கட்சிக்கு பலமா அல்லது பல வீனமா என்பதனை தலைமை தான் முடிவு செய்ய வேண்டும் என கூறினார்.

Tags:    

Similar News