வெளிநாடுகளிலிருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் தனிமை படுத்துதல் கட்டாயம்

வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் தனிமைப்படுத்துதல் கட்டாயமாக்கப்படுவதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

Update: 2021-12-25 13:36 GMT

அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொரோனா நோயாளிகள் பிரிவில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் 1.5 லட்சம் படுக்கைகள் தயாராக உள்ளது. கடந்த மே மாதம் 220 மெட்ரிக் டன் மட்டுமே கையிருப்பு இருந்தது என்றும் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாடு முழுவதும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு தற்போது 1400 மெட்ரிக் டன் அளவிற்கு ஆக்ஸிஜன் உற்பத்தி வசதிகள் அதிகரித்துள்ளது என கூறினார்.

தமிழ்நாட்டில் இதுவரை 34 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உள்ளது. 12 பேர் ஒமைக்ரான் பதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் 22 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா கொண்ட்டாட்டத்தின் போது விதிமுறைகளை கடைபிடிப்பது அவசியம். புத்தாண்டு கொண்டாட்டங்களை நட்சத்திர விடுதிகளை தவிர்த்துகொள்வது அவசியம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதிக பாதிப்புள்ள நாடுகளிலிருந்து வரும் வெளிநாட்டு பயணிகள் அனைவருக்கும் ஏற்கனவே 100% கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெளிநாடுகளிலிருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் தனிமை படுத்துதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதிக பாதிப்பில்லாத நாடுகளிலிருந்து வரும் வெளிநாடு பயணிகளிடம் சோதனை விகிதம் 2 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்த ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு அவருடன் தொடர்பில் இருந்த 3338 பேருக்கு பரிசோதனை செய்ததில் பேரில் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 39 பேருக்கு ஸ் ஜீன் ட்ராப் உள்ளது என கூறினார்.

தடுப்பூசி செலுத்தும் பணிகள் மற்றும் ஓமிக்ரான் பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள மத்திய குழு விரைவில் தமிழகம் வருகிறது. நாளை தமிழ்நாடு முழவதும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என கூறிய அவர், நடிகர் வடிவேலு நலமாக உள்ளார் என்றும் மருத்துவமனை சிகிச்சை பெற்று வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News