ரெம்டெசிவிர் விற்பனை: நேரு உள்விளையாட்டு அரங்கில் மக்கள் சாலை மறியல்
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு ரெம்டெசிவிர் மருந்து வாங்க வந்த பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு ரெம்டெசிவர் மருந்து வாங்க வந்த பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேரு விளையாட்டு அரங்கத்தில் தினமும் 300 பேருக்கு மட்டுமே மருந்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்ட நிலையில் ரெம்டெசிவர் மருந்து வாங்க அதிகாலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க தொடங்கினர்.
ஆனால், நீண்ட நேரம் காத்துக் கிடப்பவர்களுக்கு டோக்கன் வழங்காமல், புதிதாக வந்தவர்களுக்கு டோக்கன் வழங்குவதாக குற்றம்சாட்டி, வரிசையில் நின்றவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இது அப்பகுதியல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.