தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கு தடை இல்லை - உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கு எக்காரணம் கொண்டும் தடை விதிக்க முடியாது என்று, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.;

Update: 2021-04-30 07:17 GMT

தமிழக சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி வரும் ௨ம் தேதி நடைபெறவுள்ளது.

இதற்கிடையே, வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக்கோரிய,  புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், விளம்பரத்திற்காக தொடரப்பட்ட வழக்கு என கூறி, அந்த மனுவை தள்ளுபடி செய்தது.

மேலும், அற்ப காரணங்களுடன் வழக்கு தொடர்வதை கிருஷ்ணசாமி தவிர்க்க வேண்டும் என நீதிபதிகள் கூறினர். பணப்பட்டுவாடா தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News