உள்ளாட்சித் தேர்தல்: 9 மாவட்ட செயலாளர்களுடன் நாளை ஸ்டாலின் ஆலோசனை
சென்னையில் ஊரக பகுதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்ட செயலாளர்களுடன் திமுக தலைவர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.;
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்பட உள்ளது.
வருகிற செப்டம்பர் மாதம் 15 தேதிக்குள் ஊரக பகுதி தேர்தல் நடைபெறாமல் உள்ள 9 மாவட்டங்களில்லும் நடத்தி முடிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் திமுக மாவட்ட செயலாளர்களுடன் நாளை விவாதிக்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.