நிர்வாகிகள் கட்சி தாவல், மநீம ஶ்ரீபிரியா கிண்டல்

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகி மாற்று கட்சியில் இணைந்தவர்களை, நடிகை ஸ்ரீ பிரியா தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டல் செய்துள்ளார்.;

Update: 2021-07-09 10:10 GMT

ஸ்ரீ பிரியா (பைல் படம்)

சென்னை : மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த மகேந்திரன், நிர்வாகி பத்மபிரியா உள்ளிட்ட பலருடன் நேற்று திமுகவில் இணைந்தார்.

இந்நிலையில், நடிகையும் மக்கள் நீதி மய்ய நிர்வாகியுமான ஸ்ரீப்ரியா தனது ட்விட்டர் பக்கத்தில், "சட்டையை மாற்றுவதுபோல் கொள்கைகளை மாற்றிக்கொள்ளும் சில அரசியல்காரியவாதிகள், எதற்கும் எல்லா கட்சி சின்னத்துடன் சட்டைகளை தயாராக வைத்துக்கொள்ளுங்கள். மாற்ற வசதியாக இருக்கும்" என்று குறிப்பிட்டு கிண்டல் செய்துள்ளார்.

Tags:    

Similar News