முக கவசம் அணியாதவர்கள் சஸ்பெண்ட்
முக கவசம் அணியாதவர்கள் சஸ்பெண்ட். -புதிய உத்தரவு போட்டது மின்சார வாரியம்;
மின்வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்கள் முக கவசம் அணியாமல் பணியில் ஈடுபட்டால் 'சஸ்பெண்ட்' செய்யப்படுவார்கள் என்று மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருகிறது. மின் வாரியத்தில் பணிபுரியும் அதிகாரிகள் தொடங்கி ஊழியர்கள் வரையில் பலருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மின் வினியோகம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற அதிகாரிகள் வாரியத்தில் பணிபுரியும் பலரும் முககவசம் அணியாமல் மற்றவர்களுக்கும் தொற்றுக்களை பரப்பி வருவதாக கூட்டத்தில் குற்றம்சாட்டினர். இதனையடுத்து முக கவசம் அணியாதவர்கள் 'சஸ்பெண்ட்' நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்று ஊழியர்களை எச்சரிக்க வேண்டும்' என்று கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.