மீண்டும் உக்ரைனுக்கு செல்ல பயமாக உள்ளது: தமிழகம் திரும்பிய மாணவர்கள்

நாடு திரும்பியது சந்தோசமாக இருந்தாலும் இந்தப் பதட்ட நிலையில் மீண்டும் உக்ரைனுக்கு செல்வது பயமாக உள்ளது என தமிழகம் திரும்பிய மாணவர்கள் கூறியுள்ளனர்;

Update: 2022-03-06 04:15 GMT

உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்கள்

உக்ரைனில் போர் நடந்து வரும் சூழலில் அங்கிருந்து மாணவர்களை மீட்கும் பணி கடந்த 26,ஆம் தேதியில் இருந்து நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவு முதல் விடியற்காலை வரை 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் உக்ரைனில் இருந்து டெல்லி மற்றும் மும்பை வந்தடைந்து சென்னைக்கு விமானத்தில் திரும்பினர்.

சென்னை வந்தடைந்த மாணவி நேத்திக்கா லட்சுமி பேசுகையில், நாடு திரும்பியது சந்தோசமாக இருந்தாலும் இந்தப் பதட்ட நிலையில் மீண்டும் உக்ரைனுக்கு செல்வது பயமாக உள்ளது. எனவே எங்களது படிப்பு தொடர இங்கிருக்கும் பல்கலைக்கழகங்களில் மருத்துவ படிப்பு தொடர மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். 

தற்போது போர் நிறுத்த்தம் தான் அறிவிக்கப்பட்டுள்ளது. போர் முடிந்தது என அறிவிக்கவில்லை. மீண்டும் போர் ஆரம்பிக்கும் நிலை எப்போதும் உள்ளது. ஆறு மாதம் ஆன்லைன் வகுப்பு செமஸ்டர் பயின்று மீண்டும் உக்ரைனுக்கு செல்ல வேண்டும் என்றால் எங்களுக்கு பயமாக உள்ளது. உக்ரைனில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தமிழகத்தில் உள்ள பல்கலைகழகத்தில் மருத்துவம் படிப்பை‌ தொடர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்

குடும்பத்தின் சூழ்நிலை காரணமாகவே நாங்கள் உக்ரைனுக்கு சென்று படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நீட் தேர்வு தேர்ச்சி பெற்று தான் நாங்கள் உக்ரைனுக்கு சென்று மருத்துவம் படித்து வருகிறோம் என்றும் கூறினார்.

மிதுன் முத்துக்குமார் பேசுகையில்,  பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. 36 மணி நேரம் ரயில் பயணம் செய்து பின்பு விமானத்தில் டெல்லி வந்தடைந்தது சென்னை திரும்பி உள்ளோம். தமிழகத்தில் கட்டணம் அதிகமாக இருப்பதாலேயே நாங்கள் உக்ரைனில் மருத்துவம் படிக்கக்கூடிய நிலை ஏற்பட்டது. என அவர் தெரிவித்தார்

நாடு திரும்பிய மாணவர்களை அவரது பெற்றோர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்

Tags:    

Similar News