ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிறை கைதி தப்பி ஓட்டம்

ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிறை கைதி தப்பி ஓடிய பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது

Update: 2021-09-24 18:00 GMT

மருத்துவமனையில் இருந்து தப்பிய கைதி

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த சபி என்ற முகமது சபி( 22) பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய இவரை கடந்த சில தினங்களுக்கு முன்  சென்னை வியாசர்பாடி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சிறையில் இருந்த சபிக்கு ஏற்பட்ட வலிப்பு காரணமாக கடந்த 22ம் தேதி சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கைதிகள் வார்டில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த நிலையில், இன்று மதியம் காவலர்கள் பணி நேரம் மாறும் பொழுது கழிவறையில் உள்ள மின்விசிறி நீக்கி விட்டு தப்பிச் சென்றனர். அதனைத் தொடர்ந்து தப்பித்த உடன் போலீசார் அவனை தேடி வந்த நிலையில் புளியந்தோப்பு காவல்துறையினர் சபி வழக்கமாக பதுங்கும் இடத்தை தெரிந்து காவல்துறையினர் விரைந்து சென்று மடக்கி பிடித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சபி மீது வழக்குப்பதிவு செய்து வண்ணாரப்பேட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

சிகிச்சைக்காக வந்த சிறை கைதி போலீசாரின் கண்ணில் மண்ணை துாவிவிட்டு தப்பி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

Tags:    

Similar News