இ.எஸ்.ஐ மருத்துவமனை பணியாளர்களின் கொரோனா நிதி, அமைச்சர் சி.வி கணேசன் முதல்வரிடம் வழங்கல்
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை அமைச்சர் சி.வி கணேசன் இன்று சந்தித்து கொரோனா நிவாரணப் பணிகளுக்காக, இ.எஸ்.ஐ மருத்துவமனை பணியாளர்களின் ஒரு நாள் ஊதியம் 40 லட்சத்து 18 ஆயிரத்து 530 ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.;
சென்னை : தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி கணேசன் இன்று சந்தித்து கொரோனா நிவாரணப் பணிகளுக்காக இ.எஸ்.ஐ மருத்துவமனை பணியாளர்களின் ஒரு நாள் ஊதியம் 40 லட்சத்து 18 ஆயிரத்து 530 ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்கள்.
இச்சந்திப்பின்போது தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலாளர் கிர்லோஸ் குமார் மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனை இயக்குனர் அசோக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.