கரூர் வைஸ்யா வங்கி வழங்கிய அவசர ஊர்தி சேவை: முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
கரூர் வைஸ்யா வங்கி வழங்கிய ஆம்புலன்ஸ் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.;
தமிழ்நாடு அரசின் 108 அவசரகால ஊர்தி சேவை பயன்பாட்டிற்காக கரூர் வைஸ்யா வங்கி வழங்கிய 10 புதிய அவசரகால ஊர்திகளின் சேவையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த 10 அவசர ஊர்திகளில் 2 ஆம்புலன்சுகள் வழக்கமாக இயங்கும் ஆம்புலன்சுகள். மற்ற 8 ஆம்புலன்சுகள் மலைப்பகுதிகளில் வாழும் மக்களின் மருத்துவ சேவையை கருத்தில் கொண்டு டவேரா போன்ற வாகன மாடலில் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மொத்த மதிப்பு ஒரு கோடியே 76 இலட்சத்து 87 ஆயிரத்து 472 ரூபாய் ஆகும்.